பக்கம்:என்னுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர் நண்பர் ராசாராம் அவர்கள் சொன்ன செய்தி காமராஜர் மீது எனக்கிருந்த மதிப்பை அவரது எளியவாழ்க்கை மீது நான் கொண்டிருந்த வியப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அதாவது, காமராஜர் இறந்த அன்று அவரது பீரோவைத் திறந்து பார்த்தார்களாம்! அதில் வெறும் அறுபத்தேழு ரூபாய் மட்டுமே இருந்ததாம்! இப்போதேல்லாம் என்னைப் பொறுத்தவரை என் தேவைகளை மிகவும் எளிதாக்கிக் கொண்டிருக்கிறேன். பயணம் போகும் போது வேட்டி, சட்டை தவிர வேறு எந்த டாம்பீகமும் கிடையாது. - காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களைப் பார்த்துப் பார்த்து என்னையுமறியாமல் எனக்குள் வளர்ந்து விட்ட பழக்கம் அது. 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/81&oldid=759652" இலிருந்து மீள்விக்கப்பட்டது