பக்கம்:என்னுரை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. எடிட்டர் என்பவர் யார்? ஒவ்வொரு இதழிலும் என்னென்ன மேட்டர் வரவேண்டும் என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கான படங்களை முடிவு செய்து, போட வேண்டிய இடங்களில் ஜோக்குகளைப் போட்டு, லே-அவுட்டில் கவனம் செலுத்தி பத்திரிகையை தினசரியோ, வாராவாரமோ, மாதா மாதமோ கொண்டு வருகின்ற ஆசிரியர்தான் எடிட்டர் என்று பொதுவாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால் பிரசுரமாகிற ஒவ்வொரு மேட்டரையும், ஜோக் உள்பட எடிட் செய்கிறவர்தான் எடிட்டர் என்று நான் பொருள் கொள்கிறேன். நான் படித்த பத்திரிகைக்கூடங்களில் எனக்குச் சொல்லிக் கொடுத்தது அப்படி. என் பத்திரிகைக்கூடங்களின் பெயர் வாசன் - கல்கி. வளவள வென்று எழுதக்கூடாது. அப்படியே எழுதப்பட்டிருந்தாலும், அதை அப்படியே பிரசுரம் செய்யாமல் வளர்ந்து போன முடியை வெட்டி ட்ரிம் செய்வது போல எடிட் செய்து மேட்டரைச் சுருக்கி வெளியிட வேண்டும். அதுதான் எடிட்டரின் வேலை. ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். இதுவொன்றும் சுகமான வேலையோ, சுலபமான வேலையோ அல்ல. நாம் எழுதியவற்றைத் திரும்பவும் ஒரு தரம் படிப்பதே போரடிக்கும். அப்படியிருக்க வெளியிலி ருந்து வருகின்ற மேட்டரையெல்லாம் படிப்பது 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/82&oldid=759653" இலிருந்து மீள்விக்கப்பட்டது