பக்கம்:என்னுரை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றால்? அந்தப் பொறுமைதான் ஒரு எடிட்டரின் மிக முக்கிய தகுதி. கல்கியிலும், ஆனந்த விகடனிலும் பணியாற்றிய நாட்களில் கல்கி, வாசன் ஆகிய ஜாம்பவான்களின் எடிட்டிங் திறமையை நான் அருகே இருந்து கவனித்துப் பார்ப்பதுண்டு. சிறுகதையோ, கட்டுரையோ எதுவாக இருந்தாலும் எழுத்தாளர்கள் பக்கம் பக்கமாக எழுதியிருப்பார்கள். அவற்றைக் கொஞ்சம் கூட தயவு இல்லாமல் பாரா பாராவாக வெட்டித் தள்ளுவார்கள் இந்த இரண்டு பேரும். பிரசுரமாகும் போது பார்த்தால் 'அடடா" என்று வியக்கும்படி இருக்கும். கல்லிருந்து சிலை வடிப்பது என்கிற கோணத்தில் பார்க்காமல், கல்லி லேயே சிலையிருக்கிறது. சிலையைச் சுற்றியுள்ள தேவையற்ற பகுதிகளைச் செதுக்கி எடுத்து வீசிவிட்டால் சிற்பம் தயார் என்ற கோணத்தில் பாருங்கள். அதுதான் எடிட்டிங். 'உலகை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே மாம்பழம் என்ற போது முருகர் என்ன செய்தார்? பந்தாவாக மயில் மீது ஏறி உலகம் முழுவதையும் பவனி வர ஆரம்பித்துவிட்டர். பிள்ளையார் என்ன செய்தார்? சுருக்கமாக அம்மா, அப்பாவைச் சுற்றி வந்து விட்டு 'உலகத்தைச் சுற்றியாயிற்று என்றார். பிள்ளையாருக்கே வெற்றி மாம்பழம் கிடைத்தது. ஆகவே உலகத்தில் முதல் எடிட்டர் பிள்ளையார் தான் என்பேன் நான். 83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/83&oldid=759654" இலிருந்து மீள்விக்கப்பட்டது