பக்கம்:என்னுரை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கம்போஸ் ஆகிவந்த மேட்டரை எடிட் செய்வதற்காக கையில் எடுத்துவிட்டால் எனக்கு உலகமே மறந்து போகும். 'நாலாவது பாராவில் நடுவில் இரண்டு வரிகளை தூக்கி விட்டால் பாதகமில்லை என்று தோன்றி அந்த வரிகளை அடிக்கும் போது முதல் பாராவில் இன்னும் கூட கை வைக்கலாமே என்று தோன்றும். பேனா மீண்டும் முதல் பாராவில் கிராப்' வெட்டும். இது ஏதோ மற்றவர்கள் எழுத்தில் மட்டும்தான் என்று நினைத்துவிடக்கூடாது. என் எழுத்துக்களிலேயே நான் கருணை காட்டுவதில்லை. 'சாவி யில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதே என் கேள்வி பதில் பகுதியை ஓ.கே. செய்வதற்குத்தான். எத்தனையோ முறை கேள்விக்கான பதிலை இரண்டுவரிகளில் எழுதி, திருத்தி, குறைத்து ஒரு வரியாக்கி , கடைசியில் ஒரே ஒரு வார்த்தையாகக்கூட ஆக்கியிருக்கிறேன். ஒரு ஐம்பது வருடத்துக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இப்போதைய எழுத்தாளர்கள் சுருக்கமாக எழுதுகிறார்கள் என்றே நான் சொல்வேன். இதில் தலைமை தாங்குபவர் சுஜாதா. அவர் எழுத்துக்கள் எந்த எடிட்டருக்கும் வேலை தருவதில்லை. அவரே அழகிய சிற்பமாகத்தான் செதுக்கி அனுப்புவார். சுஜாதாவின் பெரிய பிளஸ் பாயிண்ட் அவரது சுருக்கமான எழுத்துக்கள். ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக எழதவேண்டும் என்று கல்கி 84

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/84&oldid=759655" இலிருந்து மீள்விக்கப்பட்டது