பக்கம்:என்னுரை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வப்போது எனக்கு அட்வைஸ் பண்ணுவார். சுஜாதா, அவராகவே அப்படி எழுதுகிறார் என்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வரலாறு சம்பந்தப்பட்ட எழத்துக்களில் வர்ணனைகள் சற்று நீளமாக இருப்பதுண்டு. அரசகுமாரி தன் தோழியுடன் நீராடி விட்டு மஞ்சத்தில் அமர்ந்து அகிற்புகைபோட்டு மயிலிறகால் தலையை ஆற்றிக் கொள்ளும் ஒருகாட்சியை மட்டுமே தொடர்கதையில் ஒரு வார கதையாக எழுதிய காலங்களும் உண்டு... சில வாசகர்கள் அந்த வர்ணனைகளுக்காகவே வாங்கி ரசிப்பதும் உண்டு. ஆனால் அப்படிப்பட்ட வளவளா’க்களில் எனக்கென்னவோ உடன்பாடு இல்லை. 1938 ஜூன் மாதம் சென்னை வானொலியில் கல்கி அவர்கள் பேசினார். தமிழில் சிறுகதை என்பது தலைப்பு. பின்னர் அவரது அந்த உரை விகடனில் பிரசுரமாயிற்று. சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு கல்கி அதில் ஒரு உதாரணம் கொடுத்திருந்தார். ... ஒரு நாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த தாத் தய்யங் கார் ஸ்வாமிகள், அவருடைய வேலைக்காரன் குப்பனைக் கூப்பிட்டு, அடே குப்பா! நீ உடனே பூரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு ஒடிப்போய் திருக்குடந்தை திருநாராயண ஐயங்கார் ஸ்வாமி, திருக்கோவில் ஆராதனைக்கு 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/85&oldid=759656" இலிருந்து மீள்விக்கப்பட்டது