பக்கம்:என்னுரை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. அப்பலோ ஆஸ்பத்திரியில்...... பெங்களுள் பெல் காலனியில்தான் என் மருமான் (சகோதரியின் மகன்) வசித்து வருகிறான். அடுத்த தெருவில் சுஜாதா வீடு. ஒரு நாள் சாயங்காலம் அக்கா கொடுத்த இட்லியைச் சாப்பிட்டு விட்டு சுஜாதாவைப் பார்க்க நடந்தே போனேன். தெருக் கோடி போவதற்குள் மார்பில் லேசாக வலி எடுக்கவே, ரோடு ஒரத்தில் இருந்த கற்பலகை மீது உட்கார்ந்து விட்டேன். சற்று நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் நடையைத் தொடர்ந்தேன். சுஜாதா என்னைக் கண்டதும் மலர்ச்சியோடு வாங்க, என்றார். 'ஏன் ஒரு மாதிரி சோர்ந்து போயிருக்கிங்க? விஷயத்தைச் சொன்னேன். ஹார்ட் ட்ரபிளாத்தான் இருக்கும். இதை இப்படியே வளர வி டக் கூடாது, உடனே டாக்டரைப் பார்த்துருங்க, என்று கூறிக் கொண்டே அந்தப்புரம் திரும்பி மிஸஸ் சுஜாதாவை அழைத்து ஐஸோர்டில் மாத்திரை கொண்டு வா, என்றார். அது வந்ததும், 'இதை நாக்குக்கு அடியில் வச்சுக்குங்க. வலி குறைஞ்சிடும்', என்றார். சுஜாதாவுக்கு ஹார்ட் ட்ரபிள் இருப்பதாகக் கேள்வி ப்பட்டு அவரைப் பார்க்கப் போயிருந்த -ు எனக்கே நெஞ்சுவலி என்றபோது ஒரு சின்ன வடிாக்! 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/87&oldid=759658" இலிருந்து மீள்விக்கப்பட்டது