பக்கம்:என்னுரை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழாய் கெட்டுப் போனா பக்கத்திலே இன்னொரு குழாயை இணைச்சுடறாங்க. பை-பாஸ் ஆபரேஷன் இப்பல்லாம் நம் ஊரிலேயே ரொம்ப ஈவிலியா செய்ய றாங்க. இது க்காக அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் ஒட வேண்டாம்.' ஆபரேஷன் அப்பலோவில் தான் செய்து கொள்வதென்று அந்த நிமிடமே முடிவு செய்து கொண்டேன். ஆனாலும் அவர் எழுதிக் கொடுத்த கடிதத்தைக் கொண்டு போய் அலமாரியில் வைத்துவிட்டு, மறுநாளே வெளிநாட்டுக்குக் கிளம்பி விட்டேன். என் வீட்டில் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்! இருதய சிகிச்சைக்கு ஒரு மெக்கா என்று வர்ணிக்கப்படும் ஹ்யூஸ்டனுக்குத்தான் புறப்பட்டு விட்டேனோ என்று அவர்களுக்கு ஒரு சந்தேகம்! ஆனாலும் நான் ஹ்யூஸ்டனுக்குப் போகவில்லை. நேராக ஜப்பான் போனேன். அங்கிருந்து ஸான்ஃப்ரான்ஸிஸ்கோ. என்னுடன் என் மகள் ஜெயாவும் அவள் கணவர் அர்த்தநாரியும் வந்தார்கள். ஜப்பானில் எக்ஸ்போ 85 முழுவதையும் சக்கர வண்டியில் அமர்ந்தபடியே சுற்றிப் பார்த்தேன். அங்கங்கே சக்கர வண்டி பிடித்து, அதில் என்னை வைத்துத் தள்ளிக் கொண்டு போகும் பொறுப்பை ஜெயாவும் அர்த்தநாரியும் ஏற்றுக் கொண்டார்கள். சரி, ஆபரேஷனைத் தள்ளிப் போட்டுவிட்டு, உயிருக்கு ஆபத்தான நெஞ்சு வலியைக் கூடவே அழைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கும் 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/89&oldid=759660" இலிருந்து மீள்விக்கப்பட்டது