பக்கம்:என்னுரை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கலைஞர் பெருடா வருடம் வயதாகிக் கொண்டே போவதில் நம்முடைய சாதனை ஏதுமில்லை. என் பிறந்த நாளைப் பற்றி நான் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்றாலும் சில தவிர்க்க முடியாத பிறந்த நாட்கள் மறக்க முடியாதவையாக அமைந்து விடுகின்றன. அப்படிப்பட்ட ஒன்று தான் என்னுடைய அறுபதாவது பிறந்த நாள். நண்பர்கள் சிலர் விழாக்குழு அமைத்து எனது அறுபதாவது பிறந்த நாளை முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் கொண்டாடுவது என்று தீர்மானித்தார்கள். பிறந்த நாள் கொண்டாடுவதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த ஆண்டு விழாவுக்கு நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்பதால்தான். கலைஞர் வந்து வாழ்த்தப் போகிறார் என்பது ஒன்றுதான் அந்த விழாவில் எனக்கிருந்த பெரிய கவர்ச்சி. நல்ல தமிழால் வாழ்த்துப் பெறுவதை யார்தான் விரும்ப மாட்டார்கள்? ஏ.வி.எம்.ராஜேசுவரி திருமண மண்டபத்தில் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று காலை பத்தரை மணிக்கு கோபாலபுரத்திலி ருந்து எனக்கொரு தகவல்! 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/9&oldid=759661" இலிருந்து மீள்விக்கப்பட்டது