பக்கம்:என்னுரை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜப்பானுக்கும் போவதற்கு அப்படி என்ன அவசரம் வந்தது? அமெரிக்காவில் உடனடியாக நானே நேரில் சென்று கவனிக்க வேண்டிய முக்கிய வேலை ஒன்று இருந்தது. இன்னொன்று, இன்னும் சில நாட்களில் குவைத்திலிருந்து என் முத்த மகளும் அவள் கணவரும் குழந்தைகளும் இந்தியாவுக்கே திரும்பி வி டத் திட்டமிட்டிருந்தார்கள். ஆபரேஷன் நடக்கும் போது அவர்களும் என்னோடு இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது. ஆபரேஷனைத் தள்ளிப் போட்டதற்கு இந்த இரண்டு காரணங்கள்தான். அமெரிக்கா போய் வந்த பிறகு , டாக்டர் ஆர்.எஸ்.ஆரை மறுபடியும் போய்ப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அவர் என்ன ஆபரேஷன் எல்லாம் முடிந்து விட்டதா?’ என்று கேட்டார். 'இல்லை.... அமெரிக்கா போய்விட்டு நேற்றுதான் திரும்பி வந்தேன்.' அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 'என்ன 61}гтfr இது! உங்களை அப்பலோ போகச் சொன்னால் அமெரிக்கா போய் வந்தேன் என்கிறீர்களே! என்றார். மறுபடியும் டெஸ்ட்டுகள் நடத்தினார். மறுநாளே அப்பலோவுக்குப் போய் டாக்டர் கிரிநாத்தைப் பார்த்தேன். ஆர்.எஸ்.ஆரின் ரிப்போர்ட்டை மிக கவனமாகப் பார்த்த அவர் முதலில் ஆஞ்ஜியோகிராம் செய்து பார்த்து விடலாம். அப்புறம்தான் எந்த 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/90&oldid=759662" இலிருந்து மீள்விக்கப்பட்டது