பக்கம்:என்னுரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவும் எடுக்க முடியும், என்றார். எனக்கு டயபடீஸ் இருந்ததால் முதலில் அதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டியதாயிற்று. எனவே, என் உடம்பிலிருந்து ரத்தம் எடுத்து ப்ளட் ஷகர் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தார்கள். அப்புறம் தினமும் முன்று முறை இன்ஸுலின் ஊசி போட்டார்கள். இப்படி ஒரு வார காலத்திற்குள் ரத்தம் எடுக்கவும் இன்ஸ் லின் போடவும் என் உடம்பு முழுதும் சல்ல டையாய்த் துளைத்து எடுத்து விட்டார்கள். ஆஸ்பத்திரி ரிகார்டுக்கு எம்.எஸ்.விசுவநாதன் என்ற என் அசல் பெயரைக் கொடுத்திருந்தேன். சாவி’ என்று எந்தச் சமயத்திலும் யாரிடமும் சொல்லவில்லை. எம்.எஸ்.விசுவநாதன் என்ற பெயரைப் பார்த்துவிட்டு அங்குள்ள நர்ஸ் களும், சிப்பந்திகளும் என்னை மியூஸிக் டைரக்டர் விசுவநாதன் என்று எண்ணிக் கொண்டு அடிக்கடி என் அறைக்குள் வந்து ஒரு ஆவலோடு பார்த்துவிட்டுப் போனார்கள். ஒரு நாள் எனக்கு ஊசி போட வந்த நர்ஸ் ஏன் ஸார்! நீங்க மியூஸிக் டைரக்டர் விஸ்வநாதன் தானே? என்று விசாரித்தாள். நான் இல்லை என்றதும் அவள் முகத்தில் பெரிய ஏமாற்றம் தெரிந்தது. அப்புறம் ஒரு வார காலம் என்னைக் காக்க வைத்தார்கள். கடைசியில், ஆஞ்ஜியோகிராம்' இயந்திரம் பழுதாகி விட்டதென்றும் ரிப்பேர் முடிய இன்னும் சில நாட்களாகுமென்றும் சொன்னார்கள். 91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/91&oldid=759663" இலிருந்து மீள்விக்கப்பட்டது