பக்கம்:என்னுரை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வீட்டுக்குப் போனால் ப்ருஃப் பார்க்கலாமே, என்று நான் என் மகள் உமாவிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே டாக்டர் கிரிநாத் வந்து, நீங்கள் வீட்டுக்குப் போகலாம், நாங்கள் போன் முலம் தகவல் சொல்கிறோம். அப்போது வந்தால் போதும், என்று சொல்லி அனுப்பி விட்டார். அடுத்த ஏழாவது நாள், மெஷின் சரியாகி விட்டது. உடனே வரலாம்,' என்று அப்பலோ என்னை டெலி போனில் அழைத்தது. உடனே புறப்பட்டுச் சென்றேன். ஆஞ்ஜியோகிராம் செய்வதில் ஒரு பர்ஸெண்ட் ரிஸ்க் இருப்பதாக சம்பந்தப்பட்ட டாக்டர் வந்து சொன்னார். 'டாக்டர் ஆர்.எஸ்.ஆர். ஒரு பர்ஸெண்ட் கூட ரிஸ்க் இல்லை என்று சொன்னாரே! இதை இவர்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இங்கு வராமலே கூட இருந்திருப்பேனே, மருமான் சந்துருவி டமும் மாப்பிள்ளை ராமமூர்த்திடமும் முணுமுணுத்தேன். ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்க விருப்பமின்றி ஆஸ்பத்திரி ரிக்கார்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு ஆஞ்ஜியோகிராம் சோதனைக்குத் தயாரானேன். அடிவயிற்றில் வலது பக்கம் துளைபோட்டு அதன் வழியே ஒரு ட்யூபை இருதயத்துக்குச் செலுத்துகிறார்கள். அது வாழைப்பழத்தில் ஊசியாகப் பயணம் செய்து உள்ளே ரத்தக்குழாய்களில் மசியைப் பூசி விடுகிறது. எங்கெல்லாம் ரத்த ஓட்டம் 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/92&oldid=759664" இலிருந்து மீள்விக்கப்பட்டது