பக்கம்:என்னுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடைப்பட்டிருக்கிறதோ அந்த இடங்களை படத்தில் பார்க்க இந்த மை உதவுகிறது. ஆஞ்ஜியோகிராம் நடந்து கொண்டிருக்கும் போதே வீடியோப் படம் போல் எல்லாம் தெரிந்து விடுகிறது. நான் எதையும் பார்க்க விரும்பவில்லை. கண்களை மூடிக்கொண்டு விட்டேன். என்னுடைய ப்ளட் வெஸல்ஸில் மூன்று இடங்களில் ரத்த ஒட்டம் தடைப்பட்டிருப்பதை ஆஞ்ஜியோகிராம் வழி மொழிந்தது. (முன் மொழிந்தவர் டாக்டர் ஆர்.எஸ்.ஆர்.) எனவே, பை-பாஸ் சர்ஜரி அவசியம் என்பதும் முடிவாயிற்று. 'அப்படியானால் ஆபரேஷன் எப்போது? 'அடுத்த வாரம் புதன் கிழமை வைத்துக் கொள்ளலாம். அதுவரை நீங்கள் இங்கே காத்திருக்கத் தேவையில்லை. வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு திங்கட்கிழமை வந்து சேருங்க', என்று மீண்டும் எனக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி வைத்தார் சர்ஜன் கிரிநாத். திங்கட்கிழமை பகல் இரண்டு மணிக்கு ஆஸ்பத்திரிக்குப் புறப்படுவதென்று முகூர்த்தம் குறித்தாயிற்று. அதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகளையெல்லாம் பாக்கி வைக்காமல் செய்து முடித்தேன். யார் யாரிடம் எதை எதைச் சொல்ல வேண்டுமோ அதை அதை அவரவர்களிடம் சொல்லி முடித்தேன். என்னதான் மருத்துவ விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை இருந்தபோதிலும் ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கக் கூடிய சந்தேகங்களும் பயமும் 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/93&oldid=759665" இலிருந்து மீள்விக்கப்பட்டது