பக்கம்:என்னுரை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்கும் இருந்தன. ஒருவேளை நாம் பிழைக்காமல் போய்விட்டால்?... இதற்கிடையில் நண்பர்களும் உறவினர்களும் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தார்கள். என் மனோதிடத்தைப் பற்றிப் பெருமையாகப் பேசி, எமன் வந்து கூப்பிட்டாலும், கொஞ்சம் இருடா. பத்திரிகையில் சில லட்சியங்கள் பாக்கி இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன் என்று துரத்தி அனுப்பும் தைரியசாலியாச்சே, நீங்கள்! என்றெல்லாம் உற்சாகப்படுத்தினார்கள். என் வில் பவரைப் பற்றி அவர்கள் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டிய வில் நினைவுக்கு வந்தது. என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சொத்து இந்த பரந்த ஆகாயமும், பூமியும் தான். எனக்கோ இரண்டு பிள்ளைகள், வக்கிலை அழைத்து ஆகாயத்தை ஒருவனுக்கும், பூமியை ஒருவனுக்குமாக வில் எழுதி வைத்து விட்டேன்! திட்கட்கிழமையன்று புறப்பட வேண்டிய நேரம் நெருங்க நெருங்க எனக்கு என்னவோ போல் இருந்தது. நெஞ்சில் ஒரு பாரம் அழுத்தியது. ஆனாலும் எதையும் பொருட்படுத்தாமல் தைரியமாகப் புறப்பட்டு விட்டேன். எனக்கு வேண்டிய சோப்பு, சிப்பு, முக்குக் கண்ணாடி, புத்தகங்கள், கிரிதாரி பிரசாத் கொடுத்த பகவத் கிதை, வேங்கடாசலபதி படம் , நாமகிரிப்பேட்டை, மணிகிருஷ்ணசாமி, நீலா 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/94&oldid=759666" இலிருந்து மீள்விக்கப்பட்டது