பக்கம்:என்னுரை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குஞ்சுமணி, டி.கே. ஜெயராமன் இசைக் கேசட்டுகள் இத்தனையும் கைப்பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டேன். வீ ட்டு வாசல் வி நாயகரை வணங்கிவிட்டு, பந்து மித்திரர்கள் புடை சூழ ஆஸ்பத்திரி நோக்கிப் பயணமானேன். காரில் போகும்போது வழியெல்லாம் ஆபரேஷனைப் பற்றிய நினைவாகவே இருந்தது. கார் அண்ணா சாலையில் திரும்பி ய போது, எல்.ஐ. வி. கட்டிடம், ஹறிக்கின்பாதம்ஸ், ஸ்பென்ஸர் பில்டிங் போன்ற பழைய நண்பர்களைப் பாசத்தோடு ஒருமுறை (ஒருவேளை கடைசி முறையோ!) பார்த்துக் கொண்டேன். - அப்பலோவி ல் எனக்கு ரிசர்வ் செய்திருந்த அறையில் ஏ.ஸி. குளிர் இதமாக இருந்தது. ஆனாலும் அந்த இதத்தை டாக்டர்கள் அதிக நேரம் அனுபவிக்க விடவில்லை. நலைந்து பேர் வந்து என்னைச் சோதித்துப் பார்த்துவிட்டு நாளைக்கே ஆபரேஷன் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். 'நாளைக்கே ஆபரேஷனா! புதன்கிழமை என்றார்களே! இந்த திடீர் அறிவிப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்படியானால் என் ஆயுளில் ஒருநாளை இந்த டாக்டர்கள் குறைத்து விடுகிறார்களோ? என் முத்த மகள் ஜெயந்தி ஆசையோடு செய்து கொண்டு வந்திருந்த சைனீஸ் ரைஸ் என் தொண்டைக்குள் இறங்கவில்லை. இதற்குள், நாளை ஆபரேஷன் என்ற செய்தி கேட்டு 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/95&oldid=759667" இலிருந்து மீள்விக்கப்பட்டது