பக்கம்:என்னுரை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர்களும், எழுத்தாளர்களும், உறவினர்களும் என்னைக் காண அலைஅலையாய் வரத் தொடங்கி விட்டார்கள். நேரம் ஆக ஆக அந்த அறையில் ஒரு சின்ன மாத்திரை போட்டால் அது கிழே விழாத அளவுக்கு இட நெருக்கடி. அமைச்சர் ராஜா ராம் என்னைப் பார்க்க வந்தபோது அறையிலிருந்த கூட்டத்தைக் கண்டுவிட்டு, 'இதென்னய்யா, பொதுக் கூட்டமா நடத்தlங்க?' என்று கேட்டார். 'அன்போடு பார்க்க வருகிறவர்களை வேண்டாமென்று சொல்ல முடியுமா? சிறிது நேரம் என்னிடம் பேசிவிட்டு, சரி, நான் மறுபடி நாளைக்கு வந்து பார்க்கிறேன், வரட்டுமா? என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு விட்டார். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு ஆபரேஷன் என்பதால் இரவு முழுவதும் தூக்கமில்லை. ஏதேதோ கதம்பமான யோசனைகள். மறுநாள் பகல் இரண்டு மணிக்கு என்னை ஸ்ட்ரெ ச்சரில் படுக்க வைத்து ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போனார்கள். வராந்தாவில் என் மனைவி, மகள்கள், மருமகன்கள், பிள்ளைகள், மருமகள்கள், பேரன் பேத்திகள், எனக்கு ரத்தம் கொடுத்த (என் மகள் உமா, ஜெயா உட்பட) இன்னும் சில நண்பர்கள், மருமான் சந்துரு இவ்வளவு பேரும் சோகமே வடிவமாய், கண்கலங்க என்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். நான் மல்லாந்து படுத்தப்படியே இவர்களைப் பார்க்கிறேன். 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/96&oldid=759668" இலிருந்து மீள்விக்கப்பட்டது