பக்கம்:என்னுரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் மாலதியின் வாடிய முகம் தெரிகிறது. (அழாதேம்மா, வந்துருவேன்.) ஆபரேஷன் தியேட்டர் நுழைவு வாயில் வரை கூடவே வேகமாக வந்த என் மகன் பாச்சாவும், மூத்த மருமகன் விஸ்வநாதனும் சொன்ன வார்த்தைகள் என்னை உணர்ச்சி வசப்படுத்தி, கேவிக் கேவி அழ வைத்த போதிலும் அதை அடக்கிக் கொள்ள முயன்று தோற்றுப் போகிறேன். பெருகி வரும், கண்ணிரை வெட்கத்தோடு துடைத்துக் கொள்கிறேன். நான் ஏன் அழுகிறேன்? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். ஒகோ, இதனால் தான் ஆண்டவன் மனிதனுடைய கடைசித் தேதியை முன் கூட்டியே தெரியப்படுத்துவதில்லையோ? மனிதனிடமுள்ள பாச உணர்வை எமன் முதலில் அகற்றி விட்டுப் பிறகே உயிரைக் கவர்ந்து செல்வதன் ரகசியம் அதுதானோ! அறையை விட்டு ஆபரேஷன் தியேட்டருக்கு கிளம்பு முன் இரண்டு துச்சாதனர்கள் வந்து என் உடைகளைக் களைந்துவிட்டு ஒரு சின்ன டவலால் மறைக்க வேண்டிய இடத்தை மறைத்து விட்டுப் போகிறார்கள். ஆபரேஷன் தியயேட்டரில் சில பூரீதேவிகளும், அம்பி காக்களும் நர்ஸ் வேடத்தில் அங்குமிங்கும் பரபரப்போடு அலைவதைப் பார்க்கிறேன். பச்சை நிற அங்கிகளில் டாக்டர்களும் நர்ஸுகளும் சூழ்ந்து நிற்கின்றனர். தியேட்டர் முழுவதும் சூரிய 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/97&oldid=759669" இலிருந்து மீள்விக்கப்பட்டது