பக்கம்:என்னுரை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளம். ஆயுதங்களின் பளபளப்பு. என்னை ஸ்ட்ரெ ச்சரிலிருந்து ஆபரேஷன் மேஜைக்கு மாற்றியதும் மூடி மறைத்திருந்த அந்தச் சிறிய துண்டும் அகற்றப்படுகிறது. என் நிர்வாணகோலம் எனக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. சுற்றிலும் உள்ள பெண்கள் பார்க்கிறார்களே என்று வெட்கம் பிடுங்கித்தின்கிறது. எமனோடு உயிர்ப் போராட்டத்துக்கு நேரம் குறித்தாயிற்று. இன்னும் சில மணி நேரங்களில் என் தலைவி தி நிர்ணயிக்கப்படும் கட்டம். பிழைத்து வரப் போகிறேனோ, அல்லது இந்த உலகத்திலிருந்தே விடுதலை பெறப் போகிறேனோ என்ற கேள்விக் குறியோடு களம் புகுந்துள்ள நேரம். ஆனாலும் என் உயிர்ப்பிரச்சினையை மீறிக் கொண்டு மானப்பிரச்சினை மேலோங்கி நிற்கிறது. இதற்குள் யாரோ ஒரு சிறு துணியால் என் மானத்தைக் காப்பாற்றுகிறார்கள். மனம் நிம்மதி பெறுகிறது. அப்புறம் என்னென்னவோ நடக்கிறது. நான் அரை மயக்கத்தில் இருக்கிறேன். டாக்டர்களின் குரல்கள் மெலிதாய்க் கேட்கின்றன. வண்டியைத் தள்ளுகிறார்கள். மார்புக்கு மேலே சூரிய விளக்கை நகர்த்தி அட்ஜஸ்ட் செய்கிறார்கள். கத்தரிகளும், கத்திகளும் மின்னுகின்றன. ஊசி போடுகிறார்கள். இதோ, அனஸ்தேவியா கொடுக்.... நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து கொண்டிருப்பதை உணர்கிறேன். திடீரென அந்த 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/98&oldid=759670" இலிருந்து மீள்விக்கப்பட்டது