பக்கம்:என்னுரை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறை, நான், டாக்டர்கள், நர்ஸ்கள், உபகரணங்கள், கூரை வி ளக்குகள், சுவர்கள் எல்லாம் கிறுகிறுவெனச்சுற்றி ஒரு வட்ட மேகத்துண்டாக மாறி மேலே மேலே போகிறோம். "ஐயோ, நான் செத்துப் போய்விட்டேன், மேலே போய்க் கொண்டிருக்கிறேன்' என்ற உணர்வுதான் என்னுள் அப்போது சுத்தமாக இருந்தது. மனைவியும், மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு இந்தச் செய்தியை இன்னும் யாரும் G шт і ё சொல்லவி ல்லையா என்று கவலைப்படுகிறேன். அப்படிக் கவலைப்படும்போதே அந்த நினைப்பும் போய் விடுகிறது. அடுத்த விநாடி (ஆபரேஷன் நடைபெற்ற ஐந்தரை மணி நேரம் எப்படிப் போயிற்று?) மார்பில் யாரோ எதையோ தைப்பதை உணர்கிறேன். லேசாக வலி தெரிகிறது. 'ஒ.... நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்' என்று உணர்கிற போது அந்த மகிழ்ச்சியில் மார்பில் போடும் தையல் வலி பெரிதாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. மறுநாள் காலை இன்ட்டென்ஸிவ் கேர் வார்டில் நான் படுத்திருக்கிறேன். யாரோ என்னைத் தொட்டு எழுப்புகிறார்கள். கண் திறந்து பார்க்கிறபோது எதிரில் 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/99&oldid=759671" இலிருந்து மீள்விக்கப்பட்டது