பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

என்ன? ஏன்? எப்படி?

வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கென்றே சில பேர் வழிகள் இருக்கிறார்கள். இவர்கள் எந்தக் கட்சி இயக்கம் நடத்தினாலும், அதை நடத்துபவர்கள் அறியாமலே வன்முறை இயக்கமாக மாற்ற வல்லவர்கள்!
நமது மாநகராட்சிப் பள்ளிக் கூடங்கள் எப்படி யிருக்கின்றன?
மற்ற பள்ளி ஆசிரியர்களைவிட மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் கூடுதலான சம்பளம் வாங்குகிறார்கள். மற்ற பள்ளி மாணவர்களைவிட, மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் குறைவான மதிப்பெண் வாங்குகிறார்கள்! மாநகராட்சி அதிகாரிகள் இதைப்பற்றி தீவிரமாக சிந்திக்காவிட்டால், வருங்காலக் குடிமக்கள் பயங்கரமாக இருப்பார்கள்.
இந்திரா காந்தியின் எட்டாண்டு கால ஆட்சியில் என்ன பெருகியிருக்கிறது?
இந்தியா அயல் நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன் பெருகியிருக்கிறது. பல மாநிலங்களில் பஞ்சம் பெருகியிருக்கிறது. இந்தியா முழுவதும் விலைவாசி பெருகியிருக்கிறது. ஏழைகளின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. ஊழல்களும் கருப்பு வாணிபமும் ஓங்கியிருக்கிறது.
ஒரு நடிகரைப் பாவேந்தர் பாரதிதாசன் வள்ளல் என்று பாடியிருக்கிறாராமே?
கொடுக்கிலாதானைப் பாரியே என்று பாடினும் கொடுப்பாரிலையே என்று நூறாண்டுகளுக்கு முன்னரே ஒரு புலவன் நைந்து பாடினான். அதைப் படித்திருந்தும் பாவேந்தர் ஒரு நடிகரை இவ்வாறு பாடினார். பயன் ஒன்றுமில்லை.