பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

என்ன? ஏன்? எப்படி?

அப்பொழுது கட்டாய ப் படிப்பு பொறுப்புள்ள படிப்பாகவும் வெற்றி பெறும். உடலுக்கு நல்லது எது? பச்சரிசியா? புழுங்கல் அரிசியா? நல்லது கெட்டது என்பது அவரவர் பழக்க வழக்கத்தைப் பொருத்தது. அரிசி நீண்ட நாள் கெடாமல் இருக்க அதை அவித்துப் புழுங்கல் அரிசியாக்கினார்கள் தீட்டாத பச்சரிசி சத்து உடையது. எந்த அரிசி யானாலும் கைக்குத்தல் அரிசியே சிறந்தது.

பழக்க வழக்கங்களில் மாறுபாடுடைய இரு வேறு சாதியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் கலப்பு மனம் செய்து கொண்டு ஒன்றாக வாழ முடியுமா? அன்பில் இணைந்த உள்ளங்கள் ஒன்றுக்கொன்று துன்பஞ் செய்ய முற்படுவதில்லை. பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள முடியும். ஒருவன்மேல் ஏற்பட்ட அன்பை மாற்ற முடியாது. திருட்டுப் பொருளாக வரும் தெய்வச் சிலைகளை வெளி நாட்டார் ஏன் விலைகொடுத்து வாங்குகிறார்கள்? தங்கள் பங்களாக்களில் அழகான கலைப்பொருளாக வைக்க சிலர் வாங்குகிறார்கள். அவற்றின் உலோக

மதிப்புக்காக சிலர் வாங்குகிறார்கள். தமது தெய்வங்

களிடம் பக்தி கொண்டு அல்ல.

கண்மூடித்தனமாக எதையும் செய்யக்கூடாது என்பது என் கருத்து. இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

வாழ்க்கைப் பிரச்சினைகளில் முன்னோர் முடிவுகளைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவது வெற்றி தரும். தொண்டனும் சிப்பாயும் தலைவன் கட்டளைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்வு தொல்லை மிகுந்த தாய் இருக்குமே தவிர வெற்றி கிடைக்காது.