பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

வாழ்க்கை

இந்தியாவின் குடும்பக் க்ட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு உதவிசெய்யும் அமெரிக்கா தன்நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப் படுத்தவில்லையே? இது ஏன்?

நோயுள்ளவனுக்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும். மக்கள் தொகை கணக்கின்றிப் பெருகும் இந்தியாவிற்குத் தான் குடும்பக் கட்டுப்பாடு மிக மிகத்தேவை.

ஒவ்வோர் ஆண்டும் கல் லூரிகளிலிருந்து பொருளாதாரப் பட்டம் பெற்றுப் பலர் வெளியேறுகிறார்கள். நாட்டின் பொருளாதார நிலையோ நாளுக்குநாள் மோசமாகி வருகிறதே?

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

பெண் ஏன் அடிமையானாள்? பொறுப்புக்களைச் சுமந்ததோடு, பூண்டதால்.

பொறுமையையும்

கோவிலுக்கும் குடும்பத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன சிறந்த குடும்பம் ஒரு கோவில் போன்றது. அக்? குடும்பத்தில் கண்கண்ட தெய்வங்களான தாய் தந்தையரை வழிபட்டு நன்னெறிப்படும் பக்தர்களாகிய பிள்ளைகள் வாழுகிறார்கள். கோயிலில் கண்ணுக்குத் தெரியாத கடவுளை கற்பனையாகப் பாவித்துத்தானே பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

நான் பெற்ற பெண்ணை வேலையில்லாத பையனுக்குத்

திருமணம் செய்து கொடுக்கலாமா? - வேலையில் இருப்பவர்கள் நிறைய வரதட்சணை கேட்பதால், வேலையில்லாத பையனுக்குத்தான் எளிதாகத் திருமணம் செய்து கொடுக்க முடிகிறது.