பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

என்ன? ஏன்? எப்படி?

இந்தக் காலத்தில், திருமணம் ஆனபிறகு மாமனார் முயற்சியில் வேலையில் சேர்ந்த மாப்பிள்ளைகள் பலர் இருக்கிறார்கள்.

அழகு, பணம் இரண்டில் விரும்பத்தக்கது எது? பணத்திற்குப் பிறகுதான் எல்லாம்.

மக்கள் குறைவாக உள்ள ரஷியாவுக்கு, மக்கள் தொகை அதிகமாகவுள்ள இந்தியாவிலிருந்து ஒரு பகுதியினரை அனுப்பி வைத்தால் என்ன? இதற்கு ரஷியா இணங்கவேண்டும். இணங்கினால் இங்குள்ள கம்யூனிஸ்டுகளை முதலில் அனுப்பி வைக்க லாம். முதலில் வீண் கலவரங்களால் இந்தியா படும் அவதி கணிசமான அளவுக்குக் குறைந்துவிடும்.

ஆபாசக் கதைகள் வெளியிடும் வாரப்பத்திரிகைகளை மக்கள் வாங்காமல் இருந்தால், அவை திருந்துமல்லவா? நாளுக்குநாள் வாங்குபவர் தொகை கூடுவதற்காகத் தான் அவை ஆபாசக் கதைகளை வெளியிடுகின்றன. திருந்த வேண்டியது பத்திரிகைகள் மட்டுமல்ல வாங்கும் மக்களும்தான்! அரசு தலையிட்டால்தான் திருந்தும் நிலையைக் கொண்டுவர முடியும்.

பச்சை முட்டை உடம்புக்கு நல்லதா? முட்டையை எப்போதும் பாதி வேக்காட்டில் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையில் நோய் உயிரிகள் இருக்கும். வெந்த முட்டையில் சத்துப் பொருள்கள் அழிந்துவிடும். பாதி வேக்காட்டில் சத்துக்கள் அழியா! நோய் உயிரிகள் அழிந்து விடும். ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் இருவரில்ஒருவன்அறிவாளி யாகவும், மற்றொருவன் முட்டாளாகவும்இருப்பது ஏன்?