பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

()

Ο

என்ன? ஏன்? எப்படி?

உடல் நலம் இல்லாதவன் தொடர்ந்து படுக்கையில் இருக்கலாமா? கூடாது. படுத்த படுக்கையாக இருப்பதால் விரைவில் குணமடைவது தடைபடுகிறது. கூடுமானவரை சிறு வேலைகள் செய்யலாம். நடந்து கொண்டு இருக்கலாம். படுத்த படுக்கையாக இருக்கவே கூடாது. வாழ்க்கையில் முன்னேற என்ன வேண்டும்? கையின் மீது நம்பிக்கை. ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும்? அறிவுக் கலை மகளாய், அன்புத் திருமகளாய், பண்புக் குலமகளாய், பார்வைக்கு எழில் மகளாய் இருக்க வேண்டும்.

குடும்பப் பெண்கள் திரைப்படத்தில் நடிக்கலாமா? குடும்பப் பெண்ணாக இருக்க நினைப்பவர்களுக்குத் தோன்றக் கூடாத ஆசையாயிற்றே இது. படித்த ஒரு பெண்ணைப் படிக்காத ஒர் ஆண் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை நன்றாக அமையுமா? இதயங்கள் இணைந்து விட்டால் வாழ்க்கை இன்ப மாகவே அமையும். அந்த இன்பத்திற்கு கல்வி துணை யாக நிற்குமே யொழிய தடையாக இருக்காது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேரும்போது நிதிவாங்கு கிறார்களே...... எல்லாப் பொருள்களும் விலை ஏறும்போது கல்வி மட்டும் விலை ஏறாமல் இருக்கலாமா? வள்ளல்கள் கல்லூரிகளை அறங்களாக நிறுவினார்கள். இன்று நடத்துபவர்கள், அவற்றை வணிக நிறுவனங்களாக மாற்றுகிறார்கள்.