பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 99

Ο

அன்னாசிப் பழத்தைக் கர்ப்பிணிகள் உண்ணக் கூடாது என்கிறார்களே?

ஆம். அது கருவையழித்துவிடும் தன்மையுடையது. பப்பாளிப் பழத்தையும் கர்ப்பிணிகள் உண்ணக் கூடாது. மற்றவர்கள் தாராளமாக உண்ணலாம்.

முதலீடு இல்லாத தொழில் எது? வரவு இல்லாமல் செலவு இல்லை என்பது எவ்வளவு உறுதியான மெய்யோ அவ்வளவு உறுதியான மெய் முதலீடு இல்லாத தொழிலும் இல்லை என்பதாகும். பணம் மட்டுமன்று. அறிவும் உழைப்புங் கூட முதலீடுகளேயாகும்.

காலையில் 4 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்யலாமா? கூடாது. இரவு நேரத்தில் மனிதர்கள் விலங்குகள் மட்டுமின்றி தாவரங்களும் கரியமில வாயுவை வெளி விடுகின்றன. எனவே காற்றில் கரியமில வாயு பேரளவு இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் அதிகமாகக் காற்றை இழுக்க வேண்டி வரும். ஆகவே உடற்பயிற்சி விளையாட்டு ஆகியவற்றுக்கு மாலை நேரமே ஏற்றது. காதல் நிறைவேறாவிட்டால் சாதலைத் தவிர வேறு வழி எதுவும் இல்லையா?

இருக்கிறது; வாழ்தல்.

பாவில் தண்ணிர் கலப்பது பாவமா? அதனால் யாருக்கும் கெடுதல் ஏற்படுவது இல்லையே, அது எப்படிப் பாவம் ஆகும்? - இன்னொருவரை எப்படி ஏமாற்றினாலும் அது பாவமே யாகும். பேராசை கொண்டவர்களே கலப்புடத்