பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை IO1

Ο

கவலைகளை மதிக்கக் கூடாது. இன்று போனால் நாளை வென்று வரும் என்று திடமாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களிடம் புத்தகம் வாங்கும் பழக்கம் இல்லாததற்குக் காரணம் என்ன? ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்ற எண்ணம் நம் மக்களிடம், தொடக்க முதலே பரவியிருக்கிறது. கல்வி பரவவில்லை; பரவிய கல்வியும் ஒழுங்காகப் பரவவில்லை. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும், கொலைக் கதை களையும் சரசக் கதைகளையும் படிப்பதே படிப்பின் பயன் என்று கருதுகின்றனர்.

நான் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடையவள். ஆனால் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. இதற்கிடையில் என் பெற்றோர் திருமணம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் நான் என்ன செய்யலாம்?

இந்தக் காலத்து நாவல்களைப் படித்ததால் ஏற்பட்ட மனக்கோளாறு இது. கதைகளில் வரும் காதலனைப் போல் உண்மைக் காதலர்கள் இருப்பதில்லை. பெரும்பாலான காதலர்கள், பெண்களின் கற்பைக் கெடுக்கும் கயவர்களாகவேயிருக்கிறார்கள். ஆதலால் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையே, வாழ்வுகொடுக்கும் தெய்வம் என்று எண்ணிக் கொண்டு வாழ்வைக் தொடங்குங்கள். இல்லறம் உயர்ந்ததா? துறவறம் உயர்ந்ததா? இல்லறம் உலக வாழ்வுக்குரியது. துறவறம் இயற்கைக்கு மாறுபட்டது. ஒரு சில இலட்சியங்களிலே முழு ஈடுபாடு கொண்டவர்கள் இல்லறத்தில் நாட்டமில்லாதவர்களா யிருப்பார்கள். அவர்கள் துறவிகளாயிருப்பது தவறில்லை