பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

s

என்ன? ஏன்? எப்படி?

அது நாட்டுக்கு நன்மையும் ஆகும். இலட்சியத்தில் தோற்றவர்கள் பூணும் துறவறம் எப்பயனும் அற்றது. தவறு செய்யாத மனிதன் இருக்கின்றானா? எல்லாரும் தவறு செய்யும் போது நாம் ஏன் செய்யக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இது தவறு. தவறு செய்யாத மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் செய்த திருத்தங்களையே பிறர் தவறுகள் என்று திரித்துக் கூறினர். குடும்பக் கட்டுப்பாட்டினால் இந்துக்கள் தொகை குறைந்து வருகிறதாமே! குடும்பக் கட்டுப்பாடு இல்லாவிட்டாலும் இந்துக்களின் தொகை குறையத்தான் செய்யும். ஏனெனில், இந்து மதத்தில் உள்ளவர்களைத் தள்ளச் சட்டம் இருக்கிறதே தவிர, பிறமதத்தினர்களை மதம் மாற்றி அழைத்துக் கொள்ளச் சட்டம் இல்லை. இட்டிலி, தோசை இரண்டில் எது நல்ல உணவு? இட்டிவி எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவு. சிறு குழந்தை முதல் படுகிழம் வரை இதை யுண்ணலாம். தோசை வளரும் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த உணவு. காரணம் இதில் எண்ணெய் அல்லது நெய் சேர்வதால் கொழுப்புச் சத்தும் சேருகிறது. இட்டிலியில் மாச்சத்தும், புரதச்சத்தும் உள்ளன. வாழ்வளிப்பது எது? வந்தனையா? நிந்தனையா? வந்தனை செய்பவர்களை நாம் மதிப்பதில்லை. நிந்தனை செய்பவர்களுக்கு அஞ்சுகிறோம். அதனால்

. நிந்திப்பவர்களே வாழ்கிறார்கள்.

தனியாக வாணிபம் செய்வது நல்லதா? கூட்டு வாணிபம் நல்லதா?