பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. என்ன? ஏன்? எப்படி?

கறையை நீக்கிக் கொள்ளாமல் உலகுக்கு ஒளியூட்டு கிறது. அது போலத் தங்கள் வசதிக் குறைவை நீக்கிக் கொள்ளாமல் உலகம் வளத்தோடு வாழப் பாடுபடுபவர் பெரியோர் என்பது அப்புலவரின் கருத்தாகும். 0 புலி ஆட்டை அடிக்கிறது; பூனை எலியைக் கொல்கிறது. இப்படி ஒன்றை ஒன்று கொன்று தின்னும் உலகத்தில் சிலர் கொல்லாமை பேசுவது பொருத்தமாக இல்லையே? O பூனையோ புலியோ ஒன்றைக் கொன்று தின்னா விட்டால் அவற்றின் வயிற்றுப் பசி அடங்காது. மனித னுக்குப் புலால் மட்டுமே உணவல்ல; காய்கறி, கனி , கிழங்கு, கீரை என்று வேறு உணவுகளும் இருப்பதால், கொல்லாமலும், கொன்று தின்னாமலும் வாழ முடியும். காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் பண்பாட்டின் உருவமாக மாறி வருகின்றான் என்பதற்கு சைவ உணவு முறையும் ஒரு சான்றாகும். - e என் நண்பன் எந்த இரகசியத்தையும் காப்பாற்றக்

கூடியவனாக இல்லை. அவனால் பயனுண்டா? O ஓட்டைக் குடத்தில் நீரைத்தான் நிரப்ப முடியாது. அரிசியை நிரப்பிக் கொள்ளலாம். இயல்பறிந்து பயன் கொள்வது அறிவுடைமை. உங்கள் நண்பரிடம் இரகசியங் களைக் கூறுவதற்குப் பதில், பரப்பப்பட வேண்டிய செய்திகளைச் சொல்லி, அவருடைய மனக்குைறயையே பயன்படுத்திக் கொள்ளலாமே e மனிதன் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவைப் பெற்றிருக்கிறான். ஆனால் சில மனிதர்கள் அறிவற்றவர் களாயிருக்கிறார்களே! o கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு இது கூர் இல்லையே என்றால்? தீட்டிக் கொண்டால் கத்தியும் பயன்படும்; அறிவும் பயன்படும்,