பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை

Ο

105

பேய்கள் இருக்கின்றனவா? இல்லையென்றால் பேய் பிடித்து ஆடுவதைப் பற்றி தங்கள் கருத்தென்ன? பேய்பிடித்து ஆடுவது ஒருவகை மனக் கோளாறு. மூட நம்பிக்கை காரணமாக, ஒருவன் மனத்தில் எழும் மிகைப் பட்ட கற்பனையே பேய்பிடித்தவன் போல் ஆடச் செய் கிறது. அறிவும், நல்ல சிந்தனையும், தெளிந்த கருத்தும் உடையவர்கள் பேய் பிடித்தாடியதாக உலக வரலாற்றில் காணப்படவில்லை. அறியாமையும், குறுகிய எண்ணமும் உடையவர்களே பேய்பிடித்தாடுகிறார்கள்.

பொதுக் கூட்டத்தில் மாலை போடுவது தவறா? மாலை போடுவது தவறில்லை. அதைப் போட்டுக் கொள்ளாமல், கழற்றி மேசையில் வைத்துவிட்டுப் பேசுவதுதான் தவறு.

இன்பம் என்பது என்ன? கவலையில்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்வது இன்பம். தன் நலங்கண்டு மகிழ்வது சிற்றின்பம். பொது நலங் கண்டு மகிழ்வது பேரின்பம். நாட்டு நலத்துக்காகத் தான் அனுபவிக்கும் துன்பங்கூட இன்பமேயாம்.

காதல் மனம் எப்படியிருக்கும்? ஓர் உவமை சொல்ல முடியுமா? மத்தைச் சுற்றிய கயிறு போல இருக்கும். காதலியைச் சுற்றிச் சுற்றிப் போய்ப் போய்த் திரும்பும். கலித் தொகையில் காதலன் கூற்றாக வருகிறது இந்த உவமை.

வளைந்து கொடுக்காதவன் என்று சிலரைப் பாராட்டு கின்றார்கள். வளைந்து கொடுத்துக்காரியம் சாதிப்பவன் என்று சிலரைப் பாராட்டுகிறார்கள். இதில் எது சரி? இலட்சியம் ஒன்று; அந்த இலட்சியத்தையடையச் செய லாற்றுவது மற்றொன்று. இலட்சியத்தை விட்டு