பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

என்ன? ஏன்? எப்படி?

வளையக் கூடாது. இலட்சியத்தையடைய வளைந்து கொடுத்துச் செயலாற்ற வேண்டும். வாழ்வில் வெற்றி பெற ஒரு வழி கூறுங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். இடையில் ஏற்படும் இழப்புகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளுங்கள். தொடர்ந்து உழையுங்கள். அளவோடு செலவிடுங்கள், வெற்றி உங்களுடையதே.

காதல் மணம் புரிந்த சிலர் மண விலக்குச் செய்து கொள்ளுகிறார்களே! வெறும் மேனியழகில் விருப்பங் கொண்டு காதலித்தவர் கள், உள்ளம் பொருந்தாமையால் மண விலக்குச் செய்து கொள்ளுகிறார்கள். நீ எனக்கு நான் உனக்கு என்று வாழ்பவர்கள், இன்பங்குறையாது என்றும் அன்புடன் வாழ்கிறார்கள்.

காதலர்கள் சோடி சோடியாகத் தற்கொலை செய்து கொள்ளுகிறார்களே ஏன்? காதலிக்கத் துணிந்தவர்கள், வாழத் துணியாததால் தற்கொலை செய்து கொள்ளுகிறார்கள். எந்த நிலை யிலும் கோழைத்தனம் கூடாது. உறுதியுள்ளவனுக்கு இறுதி கிடையாது.

ஒரு குற்றம் செய்தவனைத் தகுந்தபடி தண்டித்தால் தானே திருந்துவான்? இது அந்தக்காலக்கருத்து. எந்தக் குற்றம் செய்பவரையும் தண்டிக்கக் கூடாது என்பது இக்கால மனோதத்துவ சிந்தனையாளர்களின் முடிவாகும். நிர்வாணமாகப் பிறந்த மனிதன் நிர்வாணமாகவே வாழ்ந்தால் என்ன?