பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 107

Ο

அழுது கொண்டே பிறந்த மனிதன் அழுது கொண்டே வாழவேண்டும் என்கின்றீர்களா? வ ள ர் ச் சி யு ம் முன்னேற்றமும்தான் மனித இயற்கை பிறந்த நிலையில் இருப்பது விலங்கியற்கை. மனிதன் தெய்வமாகலாம்; விலங்காகக் கூடாது.

ஒரே கல்லூரியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கலாமா? கோயிலுக்கு ஆண்களும் பெண்களும் சேர்ந்து வருகிறார் கள். தெருவில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து நடமாடு கிறார்கள். கல்லூரிகளிலும்அவ்வாறே ஆண்களும் பெண் களும் சேர்ந்து படிக்கிறார்கள்.

பதினாறாவதாகப் பிறந்த பிள்ளை பாராள்கிறது. இரண்டோடு நிறுத்தி விட்டால் அதை இழக்க நேரிடு மல்லவா?

உலகியற்கை உணராத பேச்சு இது. இரண்டோடு நிறுத்தினால் இரண்டுமே பாராளுந் தகுதி பெறும். செங்குட்டுவனையும் இளங் கோவையும் சிந்தித்துப் பார்க்க இக்கருத்து வலிவுறும்.

நான் மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். சிக்கனமாகச் செலவழிக்கிறேன். ஆனால் விலைவாசி ஏற்றத்தால், என் சிக்கனத் திட்டங்கள் ஒன்றும் பலிக்க வில்லை. தாங்கள் ஒரு வழி சொல்வீர்களா? மாதம் ஐம்பது ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று சிறிது சிந்தித்துப் பாருங்கள். உங்களைப் போன்றவர்களின் சம்பளத்தை இருநூற் றைம்பது ஆக்கினால், அவர்கள் நூறு ரூபாய் சம்பளம் வாங்க வாய்ப்புண்டாகக் கூடும் அல்லவா?