பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 என்ன? ஏன்? எப்படி?

e என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் எதற்கும் அஞ்சாதவன் அவனுக்குத் தாங்கள் ஒரு பட்டம் சூட்டுவீர்களா?

O உங்கள் நண்பனைப் பேதை என்று அழைக்கலாம். ஏனெனில் திருவள்ளுவர், அஞ்சுவதஞ்சாமை பேதைமை என்று கூறியிருக்கிறார்.

0 மக்களில் சிலர் திருடர்களால் இருப்பதற்கு வறுமை

தானே காரணம்? O இல்லை; இது தவறான கருத்து. வறியவர்கள் மட்டும் திருடர்களாக இல்லை; வசதியுள்ளவர்களில் சிலரும் திருடர்களாய் இருக்கிறார்கள். திருட வேண்டும் என்ற எண்ணம் ஒருவித மனக்கோளாற்றினால் உண்டாகிறது. வசதியற்றவன்; வறுமையைக் காரணம் ஆக்குகிறான்; வசதியுள்ளவன் தன் பேராசையைக் காரணம் ஆக்கிக் கொள்கிறான்.

0 கீழே விழுந்து காயம் ஏற்பட்டால் அக்காயத்தின் மேல்

சாணியைத் தடவலாமா? O சாணியைத் தடவுபவர்கள் அதில் ஏதோஇரசாயன சத்து இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இது அறிவீனம். சாணி யில் உள்ள அழுக்குகள் புண்ணின் வழியாகக் குருதியில் கலந்தால் இரத்தம் கெட்டுவிடும்.புது நோய்கள்.வளரும்.

டு பள்ளிப் படிப்பு புள்ளிக் குதவாது! இதன் பொருள்

என்ன? O ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது. அதாவது வெறும் படிப்பறிவு மட்டும் போதாது; அனுபவ அறிவும் வேண்டும். வாழ்வின் லட்சியம் என்ன?

நன்றாக வாழ்வது! -

s