பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 109

O

குழந்தைகள் அறிவு, நிறைந்த பேச்சுக்களைப் பேசு கிறார்களே?

முதியவர்கள் அந்தப் பேச்சுகளைப் பேச முடியாமல் எதற்காவது அடங்கி வாயை மூடிக் கொண்டிருக் கிறார்கள். குழந்தைகள் எவ்வித அச்சமும் அற்றவர் களாய் இருப்பதால் எதையும் துணிந்து பேசுகிறார்கள்.

ஒருவன் துன்பமான சிந்தனையிலிருக்கும் போது, அவனருகில் சென்று பாட்டுப் பாடினால் எப்படி யிருக்கும்? அந்தப் பாட்டு சில நேரங்களில், துன்பப்படுபவனின் ஆத்திரத்தைக் கிளப்பக் கூடும். சில நேரங்களில், துன்பத்தை மற்றும் மருந்தர்கப் பயன்படக் கூடும். கால நிலைகளைப் பொருத்தே பயன் அமையும்.

தற்கொலை செய்து கொள்ளுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நெஞ்சுரம் இல்லாதவர்கள்! வருவது வரட்டும் என்று துணிந்து வாழ வேண்டும். வாழ்வைத் துறப்பதைக் காட்டிலும் சூழ்நிலையின் அச்சுறுத்தலை அலட்சியப் படுத்த வேண்டும். இவனை என்ன செய்கிறேன் பார் என்று கொக்கரிப்பவர்கள், இவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று அலுக்கிற வகையில் மனத்தைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர் சிலர் தவறான வழியில் செல்வதற்குத் திரைப் படமும் ஒரு காரணம் அல்லவா? மாணவர் மட்டுமல்ல, ஆடவர் பெண்டிர் அவைருக்குமே திரைப்படம் தவறான வழியைத்தான் காட்டுகிறது. அதனால்தான் பெரியார், திரைப்படம் பார்க்கக் கூடாது என்றுகூறினார்.