பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 என்ன? ஏன்? எப்படி?

0 நல்ல உள்ளம் கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும்

துன்பத்தில் உழல்கிறார்களே? ஏன்?

O நல்ல உள்ளம் கொண்டவர்கள் துன்பங்களைத் துன்பங் களாகப் பாவிக்கமாட்டார்கள். நாம் துன்பம் என்று கருதுவதை அவர்கள் துன்பமாக எண்ணுவதில்லை. அமைதியாகவே வாழ்வு நடத்துவார்கள். அது துன்ப வாழ்வாகாது.

0 மறுமணம் என்பது கற்புநெறிக்குப் புறம்பானது

அல்லவா?

O கற்பு என்பது ஓர் ஒழுக்க்ம். கற்பு நெறி பேண வேண்டும் என்றால் ஒழுக்கத்தைக் காப்பாற்றி வாழவேண்டும் என்று பொருள்படும். ஒருவனும் ஒருத்தியுமாய் வாழ்வதே கற்பு நெறியாகும். ஒருத்தியோடு வாழ முடியாமல் வேறொருத்தியை நாடி வாழ்வது ஒப்புக் கொள்ளப்படும்போது ஒருவனோடு வாழ முடியாத பெண் வேறொருவனோடு தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்வதும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டியதே!

e இறந்துவிட்ட ஒருவனுடைய உடலுக்குச் செய்யப்படும்

சிறப்புக்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?

O இறந்தவனுடைய உடலுக்குச் செய்யும் சிறப்புகள் அவனைப் பொறுத்தவரையில் பொருளற்றவை. ஏனெனில் அவற்றை அறியவோ, நுகரவோ ஆன நிலையை அவன் கடந்துவிட்டான். அவன் சிறப்புக்களை நினைப்பதால், இனி இறக்கப் போகின்றவர்களுக்கு அவை வழிகாட்டியாய் இருக்கும் என்ற அளவிலேயே பயனுண்டு.

O கலப்புத் திருமணங்களால் ஏதாவது பயன் உண்டா?