பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 111

O

.

நெல் வளத்தைப் பெருக்குவதற்கு, நாம் இரு வேறு இனத்தை ஒன்று சேர்த்து ஒரு புதிய சிறந்த இனத்தை உருவாக்கி அனுபவத்தில் பயன் அடைந்திருக்கிறோம் கால் நடை வளத்தைப் பெருக்குதற்கு நம்நாட்டு மாடு களையும், மேல் நாட்டுக் காளைகளையும் பயன்படுத்தி ஒரு புதிய இனத்தை வளர்த்து நிறையப் பால் பெறு கிறோம். நெல்லுக்கும் மாட்டுக்கும் பயன்படுத்தும் இம் முறையை மனிதனுக்கும் பயன்படுத்தினால் வாழ்வு சிறக்கும் என்பதே பேரறிஞர் கருத்தாகும். குலப் பிறப்பைப் பழித்துப் பேசுகிறார்கள் சிலர். பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவது இக்காலத்துக்குப் பொருந்துமா? எக்காலத்துக்கும் பொருந்தாது, பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவர் சிறப் பொவ்வா செய் தொழில் வேற்றுமையால் என்று கூறினார். ஒருவனுடைய சிறப்பு அவன் செய்யும் தொழிலால் ஏற்படுவதே என்றார். தான் எடுத்துக் கொண்ட தொழிலைச் செம்மையாகச் செய்பவன் சிறப்படை கிறான். அதே தொழிலை அரைகுறையாகவும் பயனற்ற முறையிலும் அறிவில்லாமல் செய்பவன் இழிவடைகிறான்.

இன்று விலை ஏறாத பொருள் எது? அன்பு. -

பிடிவாதம், மன உறுதி இரண்டிற்குமுள்ள வேறுபாடு என்ன? -

ஒரு சிறந்த குறிக்கோளை யடைவதற்குக் காட்டப் படுவது மன உறுதி. தான் கொண்ட முடிவே சரியென்று வாதாடுவது பிடிவாதம். மனஉறுதி நல்ல பயன்களையே நல்கும்;பிடிவாதத்தினால் தீமைகளும் விளையக்கூடும்.