பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 113.

.

அறிய வாய்ப்பில்லாமையால், பழங்கதைகளைப் படித்து விட்டு இப்படிப் பாடியிருக்கிறார்.

கடத்தல் பேர்வழிகள் சிலர் நீதிமன்றத்தில் விடுதலை யாகி விடுகிறார்களே?

இதற்கு காரணம் நமது காவல்துறையின் திறமை யின்மையே! சட்டப்படியான ஆதாரங்களைத் தேடிக் கொள்ளாமல், தங்கள் முரட்டு அதிகாரத்தை மட்டும் நம்பி காவல்துறையினர் கடத்தல் பேர்வழிகளைக் கைது செய்கிறார்கள். ஆதாரமற் ற் குற்றச் சாட்டுகளை நீதி மன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஓர் ஏழைக் கணவனின் மனைவி ஆடம்பரமாக வாழ்ந்தால் என்ன நடக்கும்? குடும்பம் தடுமாறும்.

மரவள்ளிக் கிழங்கை மிகுதியாகச் சாப்பிடுங்கள் என்று இந்திராகாந்தி கூறுகிறாரே? நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குத்தான் கூறுகிறார். சர்க்கரை வியாதியுள்ள பெரிய மனிதர் களுக்குக் கூறவில்லை. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மரவள்ளிக்கிழங்கு பகை.

சோதிடம் கணிக்கப்படுகிறது என்று சொல்லுகிறார்கள். கணிக்கப்படுவது கணக்கு. கணக்குத் தவறாகுமா? சரியாகக் கணித்தால் சரியாகத்தானே இருக்கும்? சோதிடம் சொல்லுபவர்கள் கணிப்பது சோதிடத்தை யல்ல; பஞ்சாங்கத்தை. பஞ்சாங்கம் என்பது உலகங்கள் விண்மீன்கள் ஆகியவற்றின் சுழற்சிக் கணக்கு. ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலக்கணக்கில் தவறாது சுழன்று அ-8