பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

என்ன? ஏன்? எப்படி?

அடுத்தவர் நீங்கள் தான். யாரோ அதிகாரியைச்சந்திக்கச் சென்றிருக்கிறீர்கள், அவர் உங்களுக்கு அறிமுகமாகாதவர். உங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தவர் அதிகாரிக்கு வேண்டியவர். உண்மைதானே?
திருட்டு எப்போது ஒழியும்?
யாருக்கும் தனிப்பட்ட சொத்து என்பது இல்லாதபோது திருட்டுத் தானாகவே ஒழிந்து விடும்.
கடத்தல்காரர்களை வேட்டையாடுவதன் மூலம் இந்திரா அரசு மக்களிடையே செல்வாக்குப் பெற்று வருகிறதல்லவா?
பயிற்றுப் பசியோடு இருப்பவனுக்கு மர்மக்கதைகள் அமைதியளிக்க முடியாது, மக்கள் பசியைத் தீர்க்க இந்திரா காந்தியால் முடியவில்லை. வெறும் நாடகங்கள் ஆடி நிலைமையைச் சீர்திருத்த முடியாது. முதலில் நமக்குப் பசி போக்கும் அரசு அமைய வேண்டும்; வேடிக்கை காட்டும் அரசுவேண்டாம் என்றுதான் மக்கள் எண்ணுகிறார்கள்.
முற்போக்குக் கருத்துக்களை மேடைகளில் முழங்கும் சிலர் வீட்டில் பிற்போக்கு வாதிகளாய்க் காட்சியளிக்கிறார்களே?
வேடத்திற்குத் தகுந்த வசனம் பேசித்தானே நடிக்க வேண்டும். உலகம் ஒரு நாடகமேடை. இதில் சிலர் ஒரே வேடத்தில் வருகிறார்கள். சிலர் இரண்டு வேடம் கட்டிக் கொள்ளுகிறார்கள்.
தாங்கிப் பிழைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
தாக்கிப் பிழைப்பவர்களை விடச் சிறந்தவர்கள் என்றுகிறேன். உயர் நிலையில் உள்ளவர்களின் சிறந்த செயல்