பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 115

Ο

.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தினால் இந்துக்கள் மைனாரிட்டியாகி விடுவார்கள் என்று சொல்லு கிறார்களே? மெஜாரிட்டியாகி இருக்கின்ற காலத்திலேயே சாதிக் கொடுமைகளின் காரணமாக குடும்பம் குடும்பமாகவும் ஊர் ஊராகவும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர் களாகவும் முஸ்லிம்களாகவும் மாறிவிட்டார்கள். இந்துக் களை மைனாரிட்டியாக்குவது தீண்டாமையும் சாதிக் கொடுமைகளும் தாமே தவிர, குடும்பக் கட்டுப்பாடு அல்ல என்பதை மதத்தைப் பற்றித் தீவிர்மாகச் சிந்திப் பவர்கள் உணர வேண்டும்.

ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்? அவள் ஒரு ரோஜாப் பூவைப்போல் இருக்க வேண்டும். முரட்டுத்தனமாகத் தன்னைக் கைப்பற்ற வருபவர் களைத் தாக்கும் கொடிய முட்களை உடன் கொண்டவ ளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தச் சமுதாயத்தில் அவள் தன்மதிப்புடன் வாழ முடியாதவ ளாக அவதிப்பட நேரிடும். உலகத்தில் இப்பொழுது பெண் குழந்தைகள்தாம் அதிக மாகப் பிறக்கின்றனவாமே? ஏன்? அடுத்த தலைமுறையில் ஆண்குழந்தைகளை அதிகமாகப் பெற்றெடுப்பதற்காக. பால்காரர்கள் கன்றுக்குட்டியை ஏன் சாகடிக்கி றார்கள்? தனக்கேயுரிய பாலில் அது ஒரு பங்கு கேட்டுக்கொண்டு நிற்பதை விரும்பாமல், அதைப் பட்டினிகிடந்து சாக விடுகிறார்கள். இறந்தபின் அதன் தோல் கூட்டில் வைக்கோலை அடைத்து, தாய்ப்பசுவின் முன்னே நிற்க வைத்துப் பால் கறந்து, தண்ணிர் கலந்து விற்றுப் பணம் சேர்க்கிறார்கள்.