பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

என்ன? ஏன்?.எப்படி?.

உணவில் உப்பு அதிகமானால் ஆபத்தாமே? உப்பைப் போய் யார் அதிகமாகச் சாப்பிடுவார்கள்? சாப்பாட்டில் அளவோடு பயன்படுத்தும் பொருள் உப்பு ஒன்றுதான். பத்திரிகை டாக்டர்கள் ஊட்டும் வீண் பயமே இது.

நாள்தோறும் தக்காளிப் பழம் தின்றுவந்தால், உடம்பு சிவக்குமென்பது உண்மையா?

நாடியில் ஒடுங்கிக் கிடக்கின்ற வாயுவை, மனவல்லமை யினால், தலைக்கு ஏற்றினால் உடம்பு சிவப்பதோடு, கிழவனும் குமரனாகலாம் என்று சித்தர் கூறுகிறார். பொதுவாகச் சத்துள்ள உணவுகளும், அதற்கு ஏற்ற உழைப்பும் இருந்தால் உடம்பில் ஒரு தளதளப்பும் மினு

மினுப்பும் ஏறுகிறது. இதையே உடம்பு சிவக்கிறது என்று

கூறுகிறார்கள்.

நான் ஒரு திரைப்பட நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். மான உணர்ச்சியுள்ளவர்கள் நடிகையைத் திருமணம் செய்து கொள்ள விரும்பமாட்டார்கள். கலை என்ற பெயரால், இன்னொருவன் உங்கள் மனைவியைக் கட்டித் தழுவும் காட்சியை, ஆயிரம் பேர்களோடு உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் நீங்கள் ரசிகராயிருக்க லாம்; நல்ல கணவனாயிருக்க முடியாது. வாழ்க்கையை அழகு மட்டும் நிறைவுள்ளதாக ஆக்குவதில்லை. அன்பும் பண்பும் உடைய இருவர் கூடி நடத்துவதே சிறந்த குடித்தனமாகும்.

காப்பியும் தேநீரும் நச்சுக் கலந்தவை என்று கூறுகிறார் களே, கள்ளையொழித்தது போல் இவற்றையும் ஒழித்தால் என்ன?