பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 117

C)

O

காப்பி, தேநீர், வெற்றிலை, பாக்கு, புகையிலை, சிகரெட் போன்ற பொருள்களெல்லாம், சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீமைகள். எனவே கள்ளை ஒழித்ததுபோல் சட்டம் போட்டு இவற்றை ஒழிக்க முடியாது. தனிப்பட்டவர்கள் தம் உறுதியால் செய்யக் கூடியதே இவற்றைத் தவிர்க்கும் செயலாகும். இல்லறத்தில் கசப்படைந்தவர்களுக்குத் துறவறம் இனிக்குமா? காய்ச்சல் வந்து வாய் கசந்தவனுக்குத் தேங்காயும் இனிக்காது, பனம் பழமும் இனிக்காது. திரைப்படங்களைப் பார்ப்பதால் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? பார்க்காமலும் கெட்டுப் போகிறார்கள். மனித மனத்தை ஏன் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள்? குரங்கு சிறிது நேரங்கூடச் சும்மா இருக்காது. இந்த மனமும் சும்மாயிருப்பதில்லை. அது செய்கின்ற சேட்டை யெல்லாம் இதுவும் செய்கிறது. கண் மூடியிருக்கும் போது கூட மனம் எங்கெங்கோ ஒடி, எதையெதையோ, பார்த்துக் கொண்டிருக்கும். துணிச்சல் ஆணுக்கு அதிகமா? பெண்ணுக்கு அதிகமா ஆணின் துணிச்சல் அவசரத் துணிச்சல். எதிலும் முந்திக் கொள்ளும் ஆண் கடைசிவரை உறுதியாய் இருப்பது இல்லை. பெண்கள் தொடக்கத்தில் துணிச்சலைக் காட்டாவிட்டாலும் இறுதிவரை தங்கள் எண்ணத்தை நிறைவேற்றுவதில் விடாப்பிடியாக இருந்து சாதனை புரிவார்கள்.

சில திரைப்பட நடிகைகள் பத்திரிகைப் பேட்டிகளில் மிகத் துணிச்சலாகப் பதிலளிக்கிறார்களே?