பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ο

பொது அறிவு

ஒருநாளைக்கு 24 மணி நேரம் என்ற கணக்கு எப்படி வந்தது? உலகம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஒரு நாள் ஆகிறது. உலகத்தின் சுற்றளவு 24 ஆயிர மைல் ஆகிறது. ஆயிரம் மைலுக்கு ஒரு மணி வீதம் 24 மணி கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் மைல் கடந்து விடுகிறது. 24 மணி நேரத்தில் 24 ஆயிரம் மைல் கடந்து விடுகிறது.

முதலில் தோன்றியது எது? கோழியா? முட்டையா?

கோழிதான்! உலகின் முதல் உயிரிகள் அமீபாக்கள் என்ற நுண் அணு உயிரிகள். இவை இனப் பெருக்கம் செய்ய இரண்டிரண்டாக வெடித்தன. இவற்றின் பரிணாம வளர்ச்சியில் தான் இன்று காணுகின்ற உலக உயிரிகள் யாவும் தோன்றின. உயிரிகள் பெரிய உருவங் களை அடைந்த காலத்தில் வெடித்துப் பிரியாமல் கருக் களை உண்டாக்கும் பழக்கத்தை மேற்கொண்டன. கருக்களே முட்டைகள். உயிரிகளிலிருந்து முட்டைகள் தோன்றிய அடிப்படையை வைத்துப் பார்த்தால் கோழி தான் முதல் என்று தெளியலாம்.

மு. கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிக்குமா?