பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 என்ன? ஏன்? எப்படி?

O ஏன் உதிக்காது? கிழக்குக்கு மேற்கென்றும், மேற்குக்குக்

கிழக்கென்றும் பெயர் மாற்றிவிட்டால்... 0 அமெரிக்காவில் புயல்களுக்குப் பெண்களின் பெயர்களை

வைத்திருக்கிறார்களாமே? O நம் நாட்டில் பூக்களின் பெயரைப் பெண்களுக்கு வைத் தார்கள். அமெரிக்காவில் பெண்களின் பெயர்களைப் புயல்களுக்கு வைத்தால், அந்தப் புயல்கள் அங்குள்ள பெண்களைப் போல் சீறிப் பாய்வதைக் கருதியதாய் இருக்கக்கூடும். டு ஆபாசம் என்பது என்ன? O அதைப் போட்டோவைப் பார்த்துத்தான் முடிவுசெய்ய முடியும். சென்னையில் ஆபாச நடனம் ஆடியவர்களுக்கு மாகாண நீதிபதி ரூ. 250 அபராதம் விதித்தார், உயர் மன்ற நீதிபதி, போட்டோ பிடித்திருந்தால், வழக்கைச் சரியான சான்றோடு நடத்தியிருக்கலாம், வெறும் வாய்ச்சொல் சாட்சியத்தை நம்புவதற்கில்லை என்று கூறி தண்டனையிலிருந்து விடுவித்துவிட்டார், ஆபாச நடனமாடியவர்களை. e இரவில் அதிக நேரம் என்னால் கண் விழித்துப் படிக்க

முடியவில்லையே! O கவலைப்படத் தேவையில்லை. காலையில் எழுந்தவுடன் படியுங்கள். காலைப்படிப்புத்தான் சிறந்த படிப்பு: காலை எழுந்தவுடன் படிப்பு என்று நமது பாரதியாரே பாடியிருக்கிறார். இ எந்தக் கருத்தையும் நீங்கள் அஞ்சாமல் எழுதுகிறீர்களே?

எப்படி? O நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்! என்ற நாவுக்காசரும், புற்றில்வாழ் அரவு மஞ்சேன் என்ற