பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது அறிவு r!21

மாணிக்கவாசகரும், அச்சமில்லை, அச்சமில்லை அச்ச மென்பதில்லையே என்ற பாரதியாரும், சிறுத்தைப் புலியே வெளியில் வா என்ற பாவேந்தரும் நம்முடைய முன்னோர்கள் அல்லவா? நாம் ஏன் அஞ்சவேண்டும்!

ஏழு வண்ணங்களும் சேர்ந்ததே வெள்ளை என்கிறார் எங்கள் ஆசிரியர். இது உண்மையா? உங்கள் ஆசிரியர் சான்று காட்டி மெய்ப்பிக்கவில்லையா? ஒரு வட்ட அட்டையில் ஏழு ஆரங்கள் வரைந்து அவற்றில் ஏழு வண்ணங்களையும் பூசி, அட்டையைச் சுழற்றினால் வெள்ளையாகத் தோன்றும். வெள்ளை யாகத் தோன்றுகின்ற கதிரவனில் ஏழு வண்ணங்களும் இருப்பதால்தான் ஏழு வண்ணக்குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் உலா வருவதாகச் சொல்லுகிறார்கள். ஏழு வண்ணங்களும் சேர்ந்து கருப்பும் ஆகும். ஏழு வண்ணங்களையும் சேர்த்துக் குழப்பினால் கருப்பு வரக் காணலாம். வண்ணக்குழம்புகள் ஏழும் கலக்க கருப்பும், வண்ண ஒளிகள் ஏழும் கலக்க வெண்மையும் வரும்.

இந்த உலகத்தில் மிக வியப்பிற்குரிய பொருள் எது? இயற்கை என்று சொல்லக்கூடிய இறைவன் படைப்பு.

"குறைமணம்' என்றால் என்ன?

பேருந்து நிறுத்துமிடங்களில் நிற்பதில்லை, என்று பொது

மக்கள் குை றப்பட்டார்கள். இப்போது நின்று, இடங் கொண்ட மட்டும் ஏற்றிச் செல்வதைக் கண்டு நிறைவு பெற்றுவிட்டனர். எல்லோரையும் ஏற்றினால் பேருந்து பழுதடைந்து விடுமே என்று சில பத்திரிகைக்காரர்கள் எழுதுகிறார்கள். இவர்கள் குறை கூறிக்கொண்டே யிருப்பார்கன்; குறைநீங்கி விட்டால் நிறைவு பெற மாட்டார்கள். புதுக்குறையொன்றைக் கண்டுபிடிப்பார்