பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 என்ன? ஏன்? எப்படி?

கள். குறை கூறாவிட்டால் தலை வெடித்துப் போகு மென்று, பிரம்மா இவர்கள் தலையிலே எழுதி வைத் திருக்கின்றான்; தலைப்பிள்ளைகள் அல்லவா?

0 உலகம் எப்போது அழியும்?

O எப்போதும் அழியாது. உலகம் அழியும் என்பதெல்லாம்

புராணங்களின் கற்பனையே தவிர வேறில்லை.

0 புயல் எவ்வாறு உண்டாகிறது?

O ஒரு பாண்டத்தில் தண்ணிர் ஊற்றினால் அது ஒரே சமமாக நிற்பதைப் பார்க்கிறோம். அது போலக் காற்றும் உலகைச் சுற்றிலும் சமமாக நிற்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. ஏதாவது ஒரு காரணத் தால் ஓரிடத்தில் காற்றுக் குறையும் போது அந்த இடத்தை நிரப்புவதற்காக பிற பகுதிகளில் உள்ள காற்று அந்த இடத்தை நோக்கி விரைகிறது. விரைந்து செல்லும் அந்தக் காற்றையே நாம் புயல் என்கிறோம்.

0 ரோஜாப்பூ மணக்கும். ரோஜாப்பூ என்று ஒரு தாளிலே எழுதி அதைப் பார்த்தால் மணமா வீசும்? இப்படி ஒரு பேச்சாளர் பேசினார். இதைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

O ரோஜாப்பூ என்று எழுதி அந்தத் தாளைப் பார்க்குர போது ரோஜாவின் மணம் மட்டுமல்ல; அதன் நிறங் கூட நம் மனப்படத்தில் படிகிறது! பொறி நுகர்வுகளுக்கு எட்டாத பொருள்களையும் சொற்கள் விளங்க வைத்து விடுகின்றன.

0 என்னால் இரவில் நெடுநேரம் விழித்திருக்க முடிய

வில்லையே? -

O நல்ல வழக்கமாயிற்றே இது. இரவில் அமைதியாகத் தாங்கி எழுபவன் பகலில் திறமையாக வேலை செய்ய