பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது அறிவு 123

முடியுமே? உடல் நலத்தோடு இருக்க வேண்டுமென்றால் இரவில் விழித்திருக்கப் பழகக் கூடாது.

கு கடல் ஏன் கரையை மோதுகிறது?

O தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் கரையின் மீது அதற்குக் கோபம். அதனால் அது கரையின் மீது மோதிப் பாய்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அது கரையை மோதிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனால் கரையை மீறி மேலெழ முடியவில்லை.

கு) பெரியாருக்குப் பெரியார் என்ற பட்டத்தை யார்

கொடுத்தார்கள்?

O மறைமலையடிகளின் திருமகளாரான நீலாம்பிகை யம்மையார், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில், இந்தியை எதிர்த்துப் போராடத் தொடங்கிய பெரியாருக்குப் பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத் தார். செயற்கரிய செயல் செய்து தமிழ்மொழியைக் காப்பாற்றப் புறப்பட்ட பெரியாருக்கு இப்பட்டம் பொருத்தமானதாக அ ைமந்து விட்டது. தமிழ் மொழியின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்கும் பெரியார் ஓயாது உழைத்தார்.

0 தேனாறு எங்கேயிருக்கிறது?

O தேனாறு குன்றக்குடிக்கு அருகில் இருக்கிறது. இதில் மழை பெய்யும் போது மட்டும் தண்ணீர் ஓடுகிறது. மற்ற நாட்களில் தண்ணிரைப் பார்க்க முடியாது. தேன் எப்பொழுதுமே ஓடுவதில்லை.

0 செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் என்கிறார் திருவள்ளுவர். செவிடர்கள் இச்செல்வத்தைப் பெற முடியுமா?