பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

என்ன? ஏன்? எப்படி?


செவிச் செல்வம் என்பது கேள்வியறிவு. பல கருத்துக்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதே செவிச் செல்வம். செவியில்லாதவர்கள் இந்த அறிவைப் பத்திரிகை படிப்பதன் மூலம் பெறலாம்.
படித்த முட்டாள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்கள்?
படித்தவன் அறிவாளியாக இருப்பான் என்று நாம் எதிர் பார்க்கிறோம். அதற்குத் தகுந்த நூல்களைப் படிக்காமல், மூடத்தனமான கதைகளையும், வேண்டாத கற்பனைகளையும் படித்துவிட்டு அறிவுக்குப் பொருந்தாத முறையில் வாழ்க்கை நடத்துபவனையே படித்த முட்டாள் என்று கூறுகிறார்கள்.
ஒவ்வொரு தொழிலும் கலை என்று கூறுகிறார்களே கலை என்றால் தொழில் என்றுதான் பொருளா?
ஒவ்வொரு தொழிலும் கலையாகாது. அந்தந்தத் தொழில், அழகு பெறச்செய்யப் படும்போது அது கலையாகிறது. புகைப்படம் எடுப்பது தொழில். அதே புகைப்படத்தைப் பொருள் பொதிந்த பல கோணங்களில் எடுப்பதே கலை. சித்திரம் எழுதுவது தொழில். அந்தச் சித்திரத்தில் உணர்வுகளை வெளிப்படச் செய்வது கலை. பாட்டுப் பாடுவது தொழில். அந்தப் பாட்டைக் கேட்ட மனம் கிறுகிறுக்கச் செய்வது கலை.