பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

11

நமது அரசியல் எப்படியிருக்கிறது?
ஒரே குழப்படியாக இருக்கிறது. யாருக்கும் தெளிவான கொள்கை யில்லை. எதைச் செய்தால் நன்மை எதைச் செய்தால் தீமை? என்று தீர்மானிக்க முடியவில்லை. தலைவர்கள் எதைச் செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள். மக்கள் எதைத் தாங்குவது என்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.
பீகாரிலும் வங்காளத்திலும் ஏராளமான இளம்பெண்கள் சிறையில் கொடுமைப் படுத்தப்படுகிறார்களாமே?
நக்சலைட்டுகள் என்று கருதப்பட்ட பல இளம்பெண்கள் விசாரணையில்லாமலே, பல நாட்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள். எதற்கும் துணிந்து கிளம்பிய இந்த இளம்பெண்களை எப்படியும் நடத்தலாம் என்று சிறையதிகாரிகள் தங்கள் கோர விளையாட்டுகளுக்குப் பலியாக்குகின்றார்கள்.
பத்திரிகைகளையெல்லாம் அரசுடைமையாக்கினால் என்ன?
இப்பொழுது தான் பத்திரிகை படிக்கும் பழக்கம் நம் நாட்டில் சிறிது ஏற்பட்டு வருகிறது. அதற்குள் மூடுவிழா நடத்தும் திட்டத்தையல்லவா உங்கள் மூளை கண்டு பிடித்திருக்கிறது.
மாணவர்கள் அடிக்கடி போராட்டங்கள் நடத்துகிறார்களே ஏன்?
போராட்டங்கள் மாணவர்களுக்குப் பொழுதுபோக்குநாட்டுக்குப் பற்பல இழப்பு: பொதுப்பில்லாத கட்சித் தலைவர்களுக்கு ஒரு விளம்பரம்!
எதிர்கால இந்தியாவில் பணப்புழக்கம் எப்படியிருக்கும்?