பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

என்ன? ஏன்? எப்படி?

பைசாக்களைப் பார்க்க முடியாது. ஒரு ரூபாய் தான் மிகக் குறைந்த நாணயமாய் இருக்கும். தாள் பஞ்சத்தின் காரணமாக நூறு ரூபாய் நோட்டை ஒரு ரூபாய் நோட்டு அளவிலேயே அரசு அச்சிடும்.
கள்ளக் கடத்தல் பேர்வழிகளை அரசு வேட்டையாடிப் பிடிக்கிறதே?
கள்ளக் கடத்தல் பேர்வழிகள் 20 பேரை அரசு பிடித் திருக்கிறது. இந்த இருபது பேரோடு தொடர்புடையவர்கள் இலட்சக்கணக்கில் இருப்பார்கள். அவர்கள் உதவி யில்லாமல் இவர்கள் தங்கள் தொழிலைச் செய்திருக்க முடியாது. அப்படி உதவியவர்கள் எல்லாரும் அரசாங்க அதிகாரிகளாகவும். பணியாளர்களாகவுமேயிருப்பார்கள். அவர்களையும் பிடித்தால்தான் கள்ளக் கடத்தல் நிற்கும். வழியை அடைக்காமல் எலியைப் பிடித்தால் புதுப்புது எலிகள் வந்து கொண்டேயிருக்கும்.
கேரளாவுக்கு பால் தரும் பசுமாடுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்களாமே?
இறைச்சி தின்பவர்களுக்கு, அது காளைமாடாயிருந்தால் என்ன? பசுமாடாயிருந்தால் என்ன? இறைச்சி வேண்டும் அவ்வளவு தான்!
சாதிவாரியாக வேலைகளைக் கொடுக்காமல் பொருளாதார நிலையில் பின் தங்கியவர்கள் என்ற அடிப்படையில் கொடுக்கலாம் அல்லவா?
பொருளாதார நிலையில் மேம்பட்டவர்கள், பொருளாதார நிலையில் கீழ்ப்பட்ட தங்கள் சாதியாருக்கே வாய்ப் பளிக்க முற்படுவதன் மூலம் ஒரு சாதியாக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, சாதிவாரியாகப்பிரித்துக் கொடுக்கும் முறை ஏற்பட்டது. சாதிவாரியாகவே பின் தங்கியவர்களுக்கு வாய்ப்பளித்து உதவலாம்.