பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

9

நான் பத்திரிகை நடத்த ஆசைப்படுகிறேன்?
நான் அந்தப் பத்திரிகையை ஓசியில் படிக்க ஆசைப்படு கிறேன்.
அரசு பணியாளர்கள். 55 வயதானதும் ஓய்வு பெற வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அரசியல் வாதிகள் சாகும்வரை ஓய்வு பெறக் காணோமே?
அரசியல் வாதிகளுக்கு ஓய்வு காலச் சட்டம் கொண்டு வந்தால் அவர்கள் ஓய்வு பெறும் ஆண்டிலேயே செத்துப் போய் விடுவார்கள். அவர்கள் மூச்சு அரசியல் இல்லாமல் ஓடக் கூடிய சக்தி அற்றதாக இருக்கிறது.
சாதி மதங்கள் எப்போது ஒழியும்?
தேர்தல்கள் எப்போது ஒழியுமோ அப்போது தான் சாதி ஒழியும். அறியாமை எப்போது ஒழியுமோ அப்போது தான் மதங்கள் ஒழியும்.
எந்தவிதமான கட்டுப்பாடு மில்லாச் சுதந்திரம் எப்படியிருக்கும்?
காட்டு மிராண்டித்தனமாக இருக்கும். சமுதாயத்தில் உறுப்பினனாக உள்ள மனிதனுக்குக் கட்டுப்பாடுகள் இன்றியமையாதவை. கட்டுப்பாடுகள் சுதந்திர இன் பத்தை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடுக்கின்றன.
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் எப்போது ஒழியும்?
மாநில சுயாட்சி முறை ஏற்பட்டால் இந்தப் பெருங்குறை ஒழிந்துவிடும், இந்தியா முழுவதுக்குமாகத் திட்டம் தீட்டிச் செயலாற்றுவது எளிதல்ல. மாநிலங்கள் தம் சொந்தப் பிரச்சினையாக அணுகினால் இந்தப் பிரசினை எளிதில் அகன்று விடும். மாநிலங்களுக்கு அதி காரம் இருக்கவேண்டும்.