பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

என்ன? ஏன்? எப்படி?

தவறான பேர்வழிகளை ஒரு கட்சியிலிருந்து விலக்கி விடுகிறார்கள். அதே பேர்வழிகளை மற்றொரு கட்சி சேர்த்துக் கொள்கிறதே!
எல்லாக் கட்சிகளும் இப்படித்தான் குட்டையைக் குழப்பு கின்றன. ஒரு கட்சியிலிருந்து விலகியவனுக்கு மற்றொரு கட்சியில் இடமில்லை என்ற நிலை ஏற்பட்டால், நாட்டில் ஒழுக்கத்துக்குச் சிறப்பு உண்டாகிவிடும்.
இந்திய அரசு மக்களுக்காக என்ன செய்கிறது?
வரிமேல் வரி போடுகிறது. இந்த வரிகளையெல்லாம் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்கிறது.
நீதிபதிகள் தண்டிக்கப்படுவதுண்டா?
உண்டு. கடவுள் சிலைகளைக் கள்ளக் கடத்தல் செய்த தற்காக ஒரு மாஜிஸ்டிரேட் சில காங்கிரசுக்காரர்களைத் தண்டித்தார். தண்டிக்கப் பட்டவர்கள் காங்கிரசுக் காரர்களாயிருந்த காரணத்தால் மாஜிஸ்டிரேட் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இது பீகாரில் நடந்திருக்கிறது.
கருப்புப் பணம் என்றால் என்ன?
அரசுக்கு வரிகட்டாமல் மோசடி செய்வதற்காக தொழி லதிபர்கள் மறைத்து வைக்கும் பணமே கருப்புப் பணம் என்று அழைக்கப்படுகிறது. இப்படி மறைத்து வைக்கும் பணம் கோடிக்கணக்கில் இருக்கிறதாம். இப்பணம் நாட்டில் புழங்காமல் முடங்கிக் கிடப்பதால், எத்தனையோ உற்பத்தித் திட்டங்களுக்கு உதவக் கூடிய பெரும் பணம் பயனற்றுக் கிடக்கிறது.