பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

என்ன? ஏன்? எப்படி?

டில்லி அரசு விலைகளை மேலும் மேலும் ஏற்றிக் கொண்டேயிருக்கிறதே?
வெளிநாட்டுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவது டில்லி அரசின் கையில் இல்லை. உள் நாட்டுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் டில்லி அரசு விழிக்கிறது. வரி உயர்வையும் விலை உயர்வையும் மக்கள் தாங்கும் சக்தியுள்ளவரை தாங்கிக் கொள்வார்கள். தாங்க முடியாத நிலை வரும் போது, நாடு கொள்ளைக் காடாகிவிடும்.
வருங்கால பாரதம் எப்படி இருக்கும்?
கட்டுப்பாட்டை வற்புறுத்தி கண்ணியத்தை எடுத்துரைத்துக் கடமையை நினைவூட்டும் அண்ணா போன்ற தலைவர்கள் தோன்றாவிட்டால், பம்பாயில் இருந்து டில்லி மாநாட்டுக்குப் போய்வந்த இளந்தலைமுறையினரின் கையில் நம் நாடு சிக்கிக்கொள்ளும். திலிருந்து: நாம் தப்பினாலும், நம் பொருள்கள் தப்பமுடியாது.
இந்திய முறையில் சோஷலிசம் என்பது என்ன?
புதிது புதிதாக ஏழைகளை உண்டாக்கி, நாளா வட்டத்தில் எல்லாரையுமே ஏழைகளாக்கி விடுவதுதான் இன்றைய இந்திய முறையில் சோஷலிசம்.
மக்கள் எங்கே அதிகமாகக் கூடுகிறார்கள்?
கோமாளிகள் பேசும் கூட்டங்களுக்கும், ஆபாசக் காட்சிகள் நிறைந்த திரைப்படத்திற்கும் மக்கள் அதிகமாகக் கூடுகிறார்கள்.
உடைந்த கட்சிகள் யாவும் ஒன்று சேர்ந்தால்?
மீண்டும் உடைவதற்குரிய காரணங்கள் தோன்றும்.